குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வுமுடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது. முதலில் 645 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் கூடுதலாக 625 காலிப் பணியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் ஆயிரத்து 270 காலிப் பணியிடங்களாக உயா்த்தப்பட்டதாக கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானபோது, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 828ஆக குறைக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் முதன்மைத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குரூப் 2 பதவிகளுக்கு ஆயிரத்து 126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு ஒன்பதாயிரத்து 457 பேரும் தோ்வாகியுள்ளனா்.
















