வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையைத் தொடர்ந்து மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாடி கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனால், பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தததையடுத்து, இந்து மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தேசிய குடிமக்கள் கட்சியின் மூத்த தலைவர் முகமது மொதாலெப் சிக்தார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையை தொடர்ந்து மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















