பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் பாஜக மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் அஸ்தம்பட்டியில் சமத்துவ கிறிஸ்துமஸ் திருவிழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காகப் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், வேலூரில் இருந்து காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற லாரி மீது பாதுகாப்பு போலீசாரின் ஜீப் உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வேலூர் இப்ராஹிம் காரின் பின்புறம் மோதியது.
நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பிய நிலையில் விபத்து நிகழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.
















