கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடியின் எஞ்சி நிற்கும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிப்பேரையால் அந்த நகரமே சின்னாபின்னமாகியது.
ஆயிரக்கணக்கானோர் பலியான இந்தத் துயர நிகழ்வு வரலாற்றில் பெரும் பேரிடராகப் பதிவானது.
இந்தப் பேரழிவிற்குப் பின்னர் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடியில், தற்போது சில மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கியிருக்கின்றனர். ஆழிப்பேரலையின் சுவடுகளை காண சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
இன்று 62ஆம் ஆண்டு நினைவுத் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தனுஷ்கோடியில் சிதிலமடைந்து கிடக்கும் தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலக கட்டடம், ரயில் நிலையம் உள்ளிட்ட அடையாளச் சின்னங்களை உடனடியாகச் சீரமைத்து பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















