ஓசூர் அருகே 70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகா மாநிலம் பண்ணார கட்டா வனப்பகுதியில் இருந்து ஒசூர் வடக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு 150க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வலசை வந்தன.
2 நாட்களுக்கு முன்பு ஓசூர் சானமாவு வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் தேன்கனிக்கோட்டை வனபகுதிக்கு விரட்டப்பட்டன.
அங்கிருந்து சென்ற யானைகள், பல்வேறு பகுதிகளில் பிரிந்திருந்த யானைகளுடன் இணைந்து மீண்டும் சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன.
70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அத்துடன் கால்நடைகள் மேய்ப்பவர்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















