அமெரிக்கா சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது எனச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதனால் கரீபியன் கடற்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள கடற்படை, வெனிசுலாவுக்கு சொந்தமான கப்பல்களை பறிமுதல் செய்து வருகிறது.
அதன்படி சமீபத்தில் சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற வெனிசுலாவின் கப்பலையும் அமெரிக்கா பறிமுதல் செய்தது.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், பிற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாக பறிமுதல் செய்வதன் மூலம், அமெரிக்கா சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
















