இந்தியாவை அவமதித்துப் பேசிய அமெரிக்க குத்துச்சண்டை வீரருக்கு இந்திய வீரர் நீரஜ் ஜோயத், ரிங்கிற்குள் வைத்துத் தரமான பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது.
துபாயில் நடைபெற்ற ‘மிஸ்ஃபிட்ஸ் பாக்சிங்’ தொடரில் இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், அமெரிக்காவின் அந்தோணி டைலரை எதிர்கொண்டார்.
இப்போட்டிக்கு முன்னதாக அந்தோணி டைலர், இந்தியாவைப் பற்றியும், இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் தரம் குறித்தும் மிகவும் ஏளனமாகப் பேசியிருந்தார்.
இது இந்திய ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. 6 சுற்றுகள் கொண்ட போட்டியில் நீரஜ் கோயத், தனது மின்னல் வேக குத்துக்களால் அந்தோணியை நிலைகுலைய வைத்தார். இறுதியில் நடுவர்கள் ஒருமித்த கருத்துடன் நீரஜ் கோயத் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
















