கிரிக்கெட் போட்டியைப் போல ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளின் முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் சார்பில் மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் பேசிய பயிற்சி மைய தலைவர் முடக்காத்தான் மணிகண்டன், போட்டியின் முன்னணி நிலவரத்தை வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பதால் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
















