நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழங்குடி சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அய்யன் கொல்லி, பன்னிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இப்பகுதிகளில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.
















