பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கரும்பு வழங்குவது போல, மஞ்சள் கிழங்கையும் திமுக அரசு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மஞ்சளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படும் என 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறி ஏமாற்றியதற்குப் பிராயச்சித்தமாக, விவசாயிகளிடமிருந்து மஞ்சளைக் கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
















