காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்திக்கு எதிரான குரல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது சகோதரி பிரியங்காவுக்கு ஆதரவு பெருகி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் தலைமை மீது இண்டி கூட்டணியில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டது போன்ற சம்பவங்களால் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பிரியங்காவுக்கு பெருகி வரும் ஆதரவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் காந்தி ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலங்களில் எந்த பயணத்தையும் திட்டமிட வேண்டாம் என ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
















