மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர். அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என அவர்கள் உறுதி ஏற்றனர்.
இதேபோல் எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் எம்ஜிஆரின் நினைவிடத்தின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
















