ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
புனரமைக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், தொடர்ந்து ஸ்ரீநகரில் மேலும் 83 பகுதிகளில் 24 மணி நேரம் மின் விநியோகத்தின் கீழ் வெற்றிகரமாகக் கொண்டு வந்ததற்காக மின் விநியோகக் கழகத்திற்கு ஓமர் அப்துல்லா வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
















