திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி வரும் 28ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அரசு பின்பற்றாததால் இது குறித்து மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணையில் உள்ளன. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென திருப்பரங்குன்றம் மக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மக்கள் போராட்டத்திற்கு பின்பும் அரசு நடவடிக்கை எடுக்காததால் வரும் 28ஆம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக தமிழக அரசு இந்துக்களை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தங்கள் கோரிக்கைக்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு தேர்தலில் பதிலடி கொடுப்போம் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















