திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் செல்லக் கூடாதா, வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்,
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் உள்ள இஸ்லாமியர்கள் தர்காவிற்கு செல்லக் கூடாதா? என்றும், திமுக இஸ்லாமியர்கள் மட்டும் தர்காவிற்கு செல்ல அனுமதியா? என்றும் கேள்வி எழுப்பினார்.
“இந்துக்களின் நம்பிக்கையை, ஆன்மிகத்தை திமுக அரசு சிதைக்கிறது என்றும், எல்லா தர்காவிலும் விளக்கேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தர்காவிற்கு செல்லவிடாமல் தடுக்க ஜமாத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்றும், குற்றவாளிகளை கைது செய்யாமல், வழிபாடு செய்பவர்களை தடுக்கிறது போலீஸ் என்றும் வேலுர் இப்ராஷிம் கூறினார்.
















