கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு போட்டியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.
கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி போட்டியில் வெற்றி பெற்ற நேசிகா என்ற கபடி வீராங்கனையிடம் கலந்துரையாடினார்.தொடர்ந்து அவர், மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நேசிகா, தன்னை அடையாளப்படுத்தி கொள்ள கேலோ இந்தியா திட்டம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.
பிரதமரிடம் பேச கிடைத்த வாய்ப்பு தனது வாழ்வின் முக்கிய தருணம் என்றும் அவர் கூறினார். மேலும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
















