சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்றும் நாளையும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அதிகாலை தொடங்கிய மண்டல கால பூஜைகள் நாளை நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவு பெறுகிறது.
கூட்டம் அதிகமானதால் 18 படிகளில் பக்தர்களை ஏற்றுவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சரங்குத்தி கியூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நீண்ட நேரம் தங்க வைத்த பின்னரே சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தங்க அங்கி வருகை மற்றும் மண்டல பூஜை காரணமாக இன்று 30 ஆயிரம் பேருக்கும், நாளை 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
















