சங்கீத சாகர் கலாச்சார அறக்கட்டளை மற்றும் SRM பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
மார்கழி மாத இசை மரபை போற்றும் வகையில், சங்கீத சாகர் கலாச்சார அறக்கட்டளை, பசும்பொன் அறக்கட்டளை மற்றும் SRM பல்கலைக் கழகம் இணைந்து மார்கழி இசை விழாவை நடத்துகின்றன.
தொடர்ந்து 21 ஆவது ஆண்டாக நடைபெறும் இசை விழாவின், தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் SRM பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவை தலைவர் கலைமாமணி குரு.நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில், நாதஸ்வர வித்வான், கலைமாமணி பாலசுப்பிரமணியனுக்கு இசைக்கடல் விருது வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் திருப்புகழ் குரு ஆத்மநாதன் தலைமையில், கலைமாமணி R.V. கிருஷ்ணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
















