திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளமுடைய வேலை குத்திக்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
புகழ்பெற்ற இந்த கோயிலுக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தரும் நிலையில், தென்காசியை சேர்ந்த பக்தர் ஒருவர் பாதயாத்திரையாக வருகை தந்ததோடு, 108 அடி நீளமுடைய அழகு வேலை குத்திக்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
50க்கும் மேற்பட்டவர்களின் உதவியுடன் வருகை தந்த அவர் ஆலயத்தை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
















