ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையைப் போன்று மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இணையத்தில் தாராளமாக உலாவரும் ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான மென்பொருளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகுமார் என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆபாசப் படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய மென்பொருள் அவசியம் எனக் கூறினர்.
ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறிய நீதிபதிகள், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை போன்று மத்திய அரசு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும், ஆபாச வீடியோ விவகாரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















