உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவர்களின் மொழியாற்றலையும், தொடர்புத் திறனையும் வளர்க்கும் நோக்குடன் பள்ளிகளில் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வி வழங்கும் விரிவான கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் பொது அறிவு மற்றும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொண்டு போட்டி தேர்வுகளுக்குத் தயாராக முடியும்.
செய்தித்தாள் வாசிப்பது மொழித்திறனை மேம்படுத்தவும், அமைதியையும் கவனத்தையும் மாணவர்களுக்குக் கொடுக்கும்.
இதனால் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் ஆங்கிலம், இந்தி போன்ற செய்தித்தாள்களை வாங்கி வைக்க வேண்டும் என்றும், காலையில் நடக்கும் ASSEMBLY-ல் குறைந்தபட்சம் 10 நிமிடங்களைச் செய்தி வாசிப்புக்காக ஒதுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தினமும் ஐந்து கடினமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதற்கான அர்த்தங்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் குழுவாக ஆலோசனையில் ஈடுபட்டு, முக்கியமான தலைப்புகள் குறித்து விரிவாக எழுதிப் பயிற்சி எடுக்க வேண்டுமெனவும் பல்வேறு வழிகாட்டுதல்களை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
















