இந்தியாவின் முதல் AI சூப்பர் பைக்கான கருடாவை குஜராத் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில்நுட்பத்தில், செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.
தொழில்நுட்பத்தின் கொடையான இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக வளரும் நிலையில், சர்வதேச அளவில் அதற்கான முதலீடுகள் குவிந்து வருகின்றன.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள், கருடா பைக்கை உருவாக்கியுள்ளனர்.
சுமார் 50 சதவீதம் பழைய உதிரிபாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பைக்கில் ஜிபிஎஸ், சென்சார்கள், வாய்ஸ் கமாண்டுகள் போன்ற அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளன.
















