கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பாஜக-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரத்தில், பாஜக 50 வார்டுகளை கைபற்றி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் மேயராக பாஜக-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமுள்ள 100 உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் மேயராகப் பொறுப்பேற்றார். துணை மேயர் பதவிக்குப் பாஜகவின் ஆஷாநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிப் பேசிய கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரம் மாநகராட்சியை சிபிஎம் தரைமட்டமாக்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
ஊழல் மிகுந்த இடமாகத் திருவனந்தபுரம் விளங்குவதாக விமர்சித்த அவர், கழிவுநீர் கால்வாய், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் திருவனந்தபுரம் மக்களுக்குக் கடந்த 45 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் சிறந்த 3 நகரங்களில் ஒன்றாகத் திருவனந்தபுரத்தை மாற்றுவதே இலக்கு எனவும் அவர் கூறினார்.
















