இந்தியா ஒரு வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், விஷ்வ குருவாகவும் மாற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் வெளியே வர நாம் உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.
இயற்கை பேரழிவின்போதும் கோயில்கள் சேதமடையாமல் இருக்க, அவற்றின் சிறந்த கட்டிடக் கலையே காரணம் எனக் குறிப்பிட்ட மோகன் பாகவத், இயற்கை விவசாயமே கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மண் வளத்தைப் பாதுகாத்து வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா ஒரு வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், விஷ்வ குருவாகவும் மாற வேண்டுமென வலியுறுத்தினார்.
















