சென்னை போரூர் அருகே சென்றுக்கொண்டிருந்த கார் மீது ராட்சத கற்கள் விழுந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரூரை சேர்ந்தன் சேர்மன் துரை என்பவர் தனது சொகுசு காரில் அயப்பன் தாங்கல் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த மெட்ரோ பணியில் இருந்து ராட்சத கற்கள் காரின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சுதாரித்துக்கொண்ட சேர்மன் துரை, வாகனத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். இருப்பினும் கார் முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
















