ஐ.டி. போன்ற வீட்டிலிருந்து செய்யும் பணிகளில், பெரும் ஆபத்தை AI ஏற்படுத்தும் எனக் கூகுள் டீப்மைண்டின் இணை நிறுவனர் ஷேன் லெக் எச்சரித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போடும் வார்த்தை என்றால் அது AI தான். இதனால் பல நிறுவனங்கள், ஊழியர்களுக்குப் பதிலாக, AI-ஐ கொண்டு வந்தால் சம்பளமாகத் தரும் தொகையில் பெருமளவு குறையும் என நம்பின.
இதன் காரணமாக ஏராளமான ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் லெக், தொலைதூர வேலைகளின் எதிர்காலம் பலவீனமாகத் தோன்ற தொடங்குவதாகவும், முன்பெல்லாம் 100 மென்பொருள் பொறியாளர்கள் தேவைப்பட்ட இடத்தில் 20 பேர் கூடத் தேவைப்படாமல் போகலாம் என்ற சூழலை ஏஐ உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதால் ஊழியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
















