மேற்கு வங்கத்தில் SIR பணியின் அடுத்த கட்டமாக, தேர்தல் ஆணையம் நாளை முதல் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நேரடி விசாரணையை நடத்தவுள்ளது.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்குத் தலா 11 விசாரணை குழுக்களும், மாநிலம் முழுவதும் மூன்றாயிரத்து 234 குழுக்களும் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு தேர்தல் பதிவு அதிகாரி மற்றும் ஒரு நுண்-பார்வையாளர் இருப்பார்கள். யாருக்கெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதோ, அவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் குறிப்பிட்ட மையத்திற்குச் சென்று, தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அடுத்த ஐந்து நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















