வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெஸ்வால், வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விரோத நடவடிக்கைகள் கவலையளிப்பதாக கூறினார்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கி வருவதாகவும். வங்கதேச மக்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், வங்கதேசத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு எனவும். வங்கதேசத்தில் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
















