திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் இருந்து வெளியேறிய ரசாயன நுரையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி வழியாகச் செல்லும் பாலாற்றில் சில தனியார் தோல் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆற்றுநீர் கருமை நிறத்துடன் காட்சியளிப்பதுடன் துர்நாற்றத்துடன் கூடிய நுரை பொங்கியது. பாலாற்று நீரால் விவசாயம் பாதிக்கப்படும் எனக்கூறும் விவசாயிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாலாற்று நீர் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் பலனில்லை எனக் குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், தோல் தொழிற்சாலைகள் மீதும் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















