வடமாநிலத்தில் பாய் பெஸ்டியால் பிறந்தநாள் கொண்டாட்டமே களவரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளைஞர் ஒருவர் தனது காதலியின் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்தார். அதற்காகச் சிறப்பு அலங்காரம், கேக், பரிசு எனத் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்.
அதோடு காதலியின் பிறந்தநாளுக்கு நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோரையும் அழைத்திருந்தார். இதனைதொடர்ந்து அந்தப் பெண் கேக் வெட்ட, கொண்டாட்டம் ஆரம்பமானது.
தனக்காக பார்த்துப் பார்த்து பிறந்த நாள் கொண்டாட்டத்தை தயார் செய்த காதலனுக்கு முதலில் கேக் கொடுத்த அந்தப் பெண், அவரின் பாய் பெஸ்டிக்கு கேக்கை ஊட்டிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் ஆண் நண்பரை தாக்கி, கேக், பலூன் என அனைத்தையும் சேதப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியுள்ளது.
















