சென்னை நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமையன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசின் செயல் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















