தொடர் விடுமுறை காரணமாகச் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி படகுத்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள பூலாம்பட்டி படகுத்துறைக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
அந்தவகையில், தொடர் விடுமுறையை ஒட்டிக் குவிந்த சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சென்றும், படகு சவாரி செய்தும் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயில், காவிரித்தாய் சன்னதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















