டெல்லியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அடல் உணவகங்களால் இரண்டு நாட்களில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் அடல் உணவகங்கள் திறக்கப்பட்டன. இங்கு 5 ரூபாய்க்கு விற்கப்படும் சத்தான தாலி உணவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இதனால் மேலும் 100 அடல் உணவகங்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
















