தொடர் விடுமுறை காரணமாகக் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாகக் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து செண்பகனூர், சீனிவாசபுரம், மூஞ்சி கல், நட்சத்திர ஏரி போன்ற பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.
















