வார இறுதி மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீராடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து, விடுமுறையை கொண்டாடினர்.
மேலும் ஐயப்ப பக்தர்களின் வருகை மற்றும் சுற்றுலாப் பயணிகளால் குற்றாலத்தில் உள்ள உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
















