திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
திருவொற்றியூர் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது.
இதன் காரணமாக குண்டும் குழியுமாகச் சாலை மாறியதோடு பலரும் சிக்கி விபத்துக்குள்ளாகினர்.
தேங்கிய நீரை அப்புறப்படுத்தக்கோரியும், சாலையை சீரமைக்க கோரியும் பல நாட்களாகக் கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து டயர் டியூப் பழுதுபார்க்கும் உரிமையாளர் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் எதிரொலியாகப் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மண்ணை கொட்டி தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது.
இருப்பினும் நிரந்தரமாகப் புதிய சாலையை அமைத்து தரப் பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
















