விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொங்கலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரது வீட்டின் முன்பகுதியில் அவரது மகள் கமலிகா, உறவினரின் மகள் ரிஷகா ஆகியோர் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாகக் கேட் சரிந்து, சிறுமிகள் இருவரின் மீது விழுந்தது. இதனால் இருவரும் கேட்டின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
அப்போது அங்கு யாரும் இல்லாததால் சிறுமிகளை உடனடியாக மீட்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிறுமிகள் கமலிகா, ரிஷிகா ஆகியோர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















