திருத்தணி அடுத்த கர்லம்பாக்கம் காலனியில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி இருவர் உயிரிழந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கர்லம்பாக்கம் காலனி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீரை அருந்திய கிராம மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏழுமலை, சுதா ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாயினர்.
கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதே உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய மக்கள், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















