இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிம்லா மருத்துவமனையில் நோயாளியைத் தாக்கியதாக மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
















