திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வனப்பகுதியில் 2 சிறிய ரக ராக்கெட் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
வீரமலை பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பயிற்சி நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் நாகனூர் வனப்பகுதிக்கு உடபட்ட பகுதியில் 2 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தகலவறிந்த வந்த காவல்துறையினர், வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர்.
அவை வெடிக்காத குண்டுகள் எனவும் பயிற்சியின்போது தவறுதலாக அவை வனப்பகுதியில் விழுந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
















