2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்குப் பூட்டு போட வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பேசியவர்,
பொங்கல் பண்டிகைக்கு பின், என்.டி.ஏ. கூட்டணி மேலும் வலுவடையும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதுபோல் தமிழகத்தில் நடப்பது பொற்கால ஆட்சியா? என்று கேள்வி எழுப்பிய அவர் தமிழகத்தில் கொலை, கொள்ளைகளால் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
















