திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்திய முருக பக்தர்கள் பஜனை பாடி கோஷங்களை எழுப்பினர்.
மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தமிழக அரசு அதனை பின்பற்றவில்லை.
அரசின் இந்தச் செயல் பல்வேறு தரப்பினருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தரிசனம் செய்வதற்காக வந்த வெளியூர் பக்தர்கள் தீபம் ஏற்ற வலியுறுத்திக் கும்மி அடித்தனர்.
















