மதுரையிலிருந்து அருகே உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான பல்வேறு ரயில் திட்டங்களை முன் வைத்து, அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து நிர்வாகிகள் மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய ரயில் திட்டங்கள் குறித்த மனுவை, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் வழங்கினர்.
இதனை பெற்றுக் கொண்ட ரயில்வே கோட்ட மேலாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கக்கபடும் என உறுதி அளித்ததாகத் தெரிவித்தனர்.
















