இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிசுக்கு நினைவு மண்டபம் கட்டி சீனா கவுரவித்துள்ளது.
சீனா – ஜப்பான் இடையே 1937ல் நடந்த போரின் போது சீன போர்க்களத்தில் பணியாற்றி நுாற்றுக்கணக்கான உயிர்களை இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் காப்பாற்றினார்.
இதனால் அவரை கவுரவிக்கும் விதமாக, ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபத்தை அந்நாட்டு அரசு திறந்துள்ளது.
















