திமுக சொல்வதைதான் தவெக தலைவர் விஜய் செய்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாகத் திருச்செந்தூரில் அவர் அளித்த பேட்டியில்,
திமுக சொல்வதைதான் தவெக தலைவர் விஜய் செய்கிறார் என்றும் திமுகவும், தவெகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் ஜனநாயகன் திரைப்படத்தின் விநியோக உரிமையை சன் குழுமம் தான் வாங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
தேர்தலுக்குப் பிறகு தவெக தலைவர் விஜயும் திமுகவில் இணைந்து விடுவார் என்றும் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
















