நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகளில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இப்பகுதிகளில் பெய்த வட கிழக்கு பருவமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை ஓய்ந்து வெயில் தொடங்கியுள்ளதால் முதற்கட்ட பணிகளை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
அதன் படி தேங்கிய மழைநீரை அகற்றிய தொழிலாளர்கள் பாத்திகள் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
















