திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் கறிக்கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை பிடித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் பணியாற்றி வந்தார்.
இராமையன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜாவுக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே தவறான உறவு இருந்ததால் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெரிவித்தனர்.
















