தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, காரையாறு – சின்னமைலாறு இடையே இரும்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
அந்தச் சமயங்களில், சின்ன மயிலாறு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதுதொடர்பாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் அண்மையில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, காரையாறு – சின்னமைலாறு இடையே இரும்பு பாலம் அமைப்பதற்காக அரசு நிதி ஒதுக்கிய நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இது, பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















