புதுச்சேரியில் போலி மருந்துத் தயாரிப்பு வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகியைக் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரியில் செயல்பட்டுவந்த தொழிற்சாலை மூலமாகப் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாகத் தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜா, முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி, என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகி மணிகண்டன் உட்பட 21 போ் கைது செய்யப்பட்டனா்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, வழக்கில் சிக்கி சிறையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டனை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
















