ஞாயிற்று கிழமையை ஒட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
வரத்து அதிகமாக இருந்ததால் மீன்களின் விலை சற்று குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி வஞ்சிரம் கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா கிலோ 400 ரூபாய்-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் இறால் கிலோ 300 ரூபாய்-க்கும் பால் சுறா 500 ரூபாய்-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
















